Chapter 1 - Ula varum ceyarkaikkol - Chapter 1 - உலா-வ ம்ெசயற்ைகக்ேகாள் - Term 3 - 4th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 1 - Ula varum ceyarkaikkol - Chapter 1 - உலா-வ ம்ெசயற்ைகக்ேகாள் - Term 3 - 4th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்
Detailed Solutions Of Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 19 உலா வரும் செயற்கைக்கோள்
வாங்க பேசலாம்
Question 1.
பாடலை ஓசைநயத்துடன் பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.
Question 2.
செயற்கைக்கோள்களின் வகைகளை அறிந்து கொண்டு வந்து பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம் !
மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகச் செயற்கைக்கோள் இருக்கிறது.
செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியைக் கண்காணிக்கும் வேலைகள், வானியல் பற்றிய பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் வகைகள் :
- தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
- புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்
- வானிலை செயற்கைக்கோள்கள்
- பயோ செயற்கைக்கோள்கள்
- சோதனை செயற்கைக்கோள்கள்
- இடங்காட்டி செயற்கைக்கோள்கள்
- அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு செயற்கைக்கோள்கள் போன்றவையாகும்.
சிந்திக்கலாமா?
செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?
Answer:
- செயற்கைக்கோள் கண்டுபிடிக்காமல் இருந்தால் உலகில் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது.
- தகவல் தொடர்பு இருந்திருக்காது.
- பிற கோள்களைப் பற்றி அறிந்திருக்க இயலாது.
- புயல் மழை வருவதை அறிந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
- காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாது.
- மண்வ ளம் கனிம வளம் பற்றி அறிய முடியாது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா!
Question 1.
மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மண்ணி + லுள்ள
ஆ) மண்ணில் + உள்ள
இ) மண் + உள்ள
ஈ) மண்ணில் + உள்ளே
Answer:
ஆ) மண்ணில் + உள்ள
Question 2.
நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நிழள் + படம்
ஆ) நிழை + படம்
இ) நிழல் + படம்
ஈ) நிலை + படம்
Answer:
இ) நிழல் + படம்
Question 3.
உண்மை என்ற சொல்லின் பொருள் ………………….
அ) பொய்
ஆ) தவறு
இ) சரி
ஈ) மெய்
Answer:
ஈ) மெய்
Question 4.
நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல்ல + பயன்
ஆ) நன்மை + பயன்
இ) நல் + பயன்
ஈ) நற் + பயன்
Answer:
ஆ) நன்மை + பயன்
Question 5.
அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) பக்கத்தில்
ஆ) எதிரில்
இ) அண்மையில்
ஈ) தொலைவில்
Answer:
ஈ) தொலைவில்
வினாக்களுக்கு விடையளிக்க
Question 1.
‘பறவைக் கப்பல்’ எனக் குறிப்பிடப்படுவது எது?
Answer:
பறவைக் கப்பல் எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள்கள்.
Question 2.
செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக.
Answer:
- மண்வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
- ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து மனித உயிர்களைக் காக்கிறது.
இணைந்து செய்வோம்

Answer:

பாடலை நிறைவு செய்வோம்

Answer:

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

மாணவர்கள் தாங்களாகவே வண்ணம் தீட்டி மகிழ வேண்டும்.
சொல் உருவாக்கலாமா!
கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால் செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்

Answer:

அறிந்து கொள்வோம்
இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் வானவியலும் கணிதவியலும் சிறந்து விளங்கியவர்கள்.
செயல் திட்டம்
நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்களை எழுதி வருக.

கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. செயற்கைக்கோள் உயர உயரப் பறந்து ……………………………………. தருகிறது.
2. செயற்கைக்கோள் ……………………………………. ஆய்வு செய்வதற்கு விண்ணில் சீறிப் பாயும்.
3. செயற்கைக்கோள் மண்ணிலுள்ள வளத்தை ……………………………………. சொல்லிடும்.
4. செயற்கைக்கோள் ……………………………………. இயங்கிடும்.
5. செயற்கைக்கோள் வானில் சுற்றும் கோள்களை ……………………………………. எடுத்திடும்.
Answer:
1. செயற்கைக்கோள் உயர உயரப் பறந்து நற்பயனைத் தருகிறது.
2. செயற்கைக்கோள் விண்வெளி ஆய்வு செய்வதற்கு விண்ணில் சீறிப் பாயும்.
3. செயற்கைக்கோள் மண்ணிலுள்ள வளத்தை உண்மையாகச் சொல்லிடும்.
4. செயற்கைக்கோள் தன்னிச்சையாக இயங்கிடும்.
5. செயற்கைக்கோள் வானில் சுற்றும் கோள்களை நிழற்படம் எடுத்திடும்.
விடையளி:
Question 1.
செயற்கைக்கோளினால் விளையும் பயன்கள் யாவை?
Answer:
· செயற்கைக்கோள் விண்வெளி ஆய்வு செய்கிறது.
· மண்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
· தகவல் தொடர்புக்கு உதவுகிறது.
· வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.
· வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுத்து, நமக்கு அனுப்புகிறது.
· கனிம வளத்தையும் கடல் வளத்தையும் குறிப்பிடுவதோடு, ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களைக் காக்கிறது.
