WELCOME TO SaraNextGen.Com

Chapter 8.2 - Mukam - Chapter 8.6 - குறியீடு - 12th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 8.2 - Mukam - Chapter 8.6 - குறியீடு - 12th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.2 முகம் - Text Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.
உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வலிமையென்று நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?
Answer:
எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதை என்னால் சாதிக்க முடியும்’ என்ற மன உறுதியோடு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும். முதலில் என்னுடைய வலியை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற வெற்றியடைய உடல் வலிமை மட்டுமல்ல மனத்தின் வலிமையுந்தான்.

அரிய பெரிய சாதனைகள் மனத்தின் வலிமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்ற உண்மையினை மறந்து விடக்கூடாது. மனத்தை பல வழிகளில் செலவழித்து விடாமல் ஒரே நோக்கில் ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மனம் பொலிவு பெறும்.

மனத்தின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தச் செயலையும் எளிதாகச் செய்ய முடியும். நல்ல எண்ணங்கள் குவியும் போது உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். இதன் மூலம் சிறந்த வலிமைப் பெற்று எதையும் சாதிக்க முடியும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் – என்கிறார் வள்ளுவர்.
நம் வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது.
அ) தமது வீட்டு முகவரியை
ஆ) தமது குடும்பத்தை
இ) தமது அடையாளத்தை
ஈ) தமது படைப்புகை
Answer:
இ) தமது அடையாளத்தை

குறுவினா

Question 1.
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘முகம்’ என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) புதையுண்ட வாழ்க்கை
ஆ) மீண்டெழுதலின் ரகசியம்
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) சுகந்தி சுப்பிரமணியின் படைப்புகள்

Question 2.
சுகந்தி சுப்பிரமணியத்தின் ஊர்
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை
ஆ) ஈரோட்டு புறநகரின் சிவகிரி
இ) தஞ்சை புறநகரின் வல்லம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கோவை புறநகரின் ஆலாந்துறை

Question 3.
சுகந்தி சுப்பிரமணியனின் கல்வித்தகுதி
அ) தொடக்கக் கல்வியை முழுமை செய்யாதவர்
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்
இ) இளங்கலை பட்டம்
ஈ) முனைவர் பட்டம்
Answer:
ஆ) உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்

Question 4.
சுகந்தி, எழுத்தாளராக நம்பிக்கை தந்தவர்
அ) அவரது தாயார்
ஆ) அவரது தந்தையார்
இ) அவரது கணவர்
ஈ) அவரது மாமியார்
Answer:
இ) அவரது கணவர்

Question 5.
சுகந்தி சுப்பிரமணியத்தின் படைப்புகளில் பாடுபொருள்
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்
ஆ) கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சவால்கள்
இ) மணமாகாத பெண்களின் அவலம்
ஈ) அறிவியல் உலகில் பெண்கள்
Answer:
அ) தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்கள்

Question 6.
நான் வெற்று வெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
என் முகத்தைத் தேடியபடி – என்று பாடியவர்

அ) சுகந்தி சுப்பிரமணியன்
ஆ) இரா. மீனாட்சி
இ) உமா மகேஷ்வரி
ஈ) சாந்தி சுப்பிரமணியன்
Answer:
அ) சுகந்தி சுப்பிரமணியன்

Question 7.
சாந்தி சுப்பிரமணியன் என்பார் தமிழின் ………….. பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
அ) மரபு
ஆ) புதுக்கவிதை
இ) நவீன
ஈ) பின்நவீன
Answer:
இ) நவீன

குறுவினா

Question 1.
சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : சுகந்தி
ஊர் : கோவை – ஆலாந்துறை
படிப்பு : உயர்நிலைக் கல்வி
சிறப்பு : தமிழின் நவீன பெண் கவிஞர்
நூல்கள் : புதையுண்ட வாழ்க்கை , மீண்டெழுதலின் இரகசியம்.

Question 2.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அடையாளம் காணும் போது உருவாவது எது?
Answer:
எழுச்சியும், ஊக்கமும் உருவாகிறது.

Question 3.
அடையாளம் இழந்த ஒருவர் எதைக் தொலைக்கிறார்?
Answer:
அடையாளம் இழந்த ஒருவர் தன் முகத்தை தொலைக்கிறார்.

Question 4.
சுகந்தி சுப்பிரமணியனின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் குறிப்பிடுக.
Answer:
புதையுண்ட வாழ்க்கை, மீண்டெடுதலின் ரகசியம்.

சிறுவினா

Question 1.
முகம் என்ற கவிதை வாயிலாக சுகந்தி சுப்பிரமணியன் கூறுவன யாவை?
Answer:

  • ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
  • அடையாளம் காணும்போது எழுச்சியும் ஊக்கமும் கிடைக்கிறது.
  • அடையாளம் இழந்த ஒரு பெண் தன் அடையாளத்தைத் தேடுகிறாள்.
  • அவள் முகமும் காணவில்லை. தேடும்போது தன்னையும் தொலைத்து விடுகிறாள்.
  • முகவரியும் தொலைந்ததால் உடலைக் கவனிக்கப் பிறரை நாடுகிறாள்.
  • மனதில் ஆசையை வளர்த்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு வெளியே சுற்றுகிறாள்.
  • இப்படியே மனம் இறுகி தன்னைத் தேடி ஆண்டுகள் பல ஆயின.